Kadhalil avalidam naan pesiya vaarthaigalai vida aval ennidam vinaaviya vinaakal thaan ennamo athikam.
காதலில் அவளிடம் நான் பேசிய வார்த்தைகளை விட அவள் என்னிடம் வினவிய வினாக்கள் தான் என்னமோ அதிகம்.
Kanakathin naduvile vali theriyaamal nirpathu pola unarkiren nee en arugil illatha ovvoru nodikalum…!
கானகத்தின் நடுவிலே வலி தெரியாமல் நிற்பது போல உணர்கிறேன் நீ என் அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியிலும்…!
En kelvikaana vidayai aval arinthum oru vitha asattu siripodu thirupi ketpaal ennaval ” nee solvathu enaku puriyavillaiye” endru.
என் கேள்விக்கான விடையை அவள் அறிந்தும் ஒரு வித அசட்டு சிரிப்போடு திருப்பி கேட்பாள் என்னவள் ” நீ சொல்வது எனக்கு புரியவில்லையே” என்று.
Sariyo thavaro en idhayam solvathaiye naan seikiren en idhayamo unnai thaane thinamum ketkirathe.
சரியோ தவறோ என் இதயம் சொல்வதையே நான் செய்கிறேன் என் இதயமோ உன்னை தானே தினமும் கேட்கிறதே.
Paarvaigalai vaithu vasiyam seithu ennai vasammai aval manathidam maati vaithu vittu ondrum theriyathathu pola ennidam naadagamaadukiraale en iniyaval…!
பார்வைகளை வைத்து வசியம் செய்து என்னை வசமாய் அவள் மனதிடம் மாட்டி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல என்னிடம் நாடகமாடிக்கிறாளே என் இனியவள்…!
En sorgaththai engum theda thevai illai unnai satru ninaithaale pothum.
என் சொர்கத்தை எங்கும் தேட தேவை இல்லை உன்னை சற்று நினைத்தாலே போதும்.
Vendaam enum solluku porul viruppamillathathu… kadhalil antha sol thaan miguntha vethanaiyaanathu.
வேண்டாம் என்னும் சொல்லுக்கு பொருள் விருப்பமில்லாதது… காதலில் அந்த சொல் தான் மிகுந்த வேதனையானது.
Unnodu palar palaginaalum un ninaivil endrume naan mattume neengatha idam piditirupen.
உன்னோடு பலர் பழகினாலும் உன் நினைவில் என்றுமே நான் மட்டுமே நீங்காத இடம் பிடித்திருப்பேன்.
Poo pondra paathaigal kooda nee illatha karanathal indru enaku karadu medaagave kaatchi alikirathu.
பூ போன்ற பாதைகள் கூட நீ இல்லாத காரணத்தால் இன்று எனக்கு கரடு மேடாகவே காட்சி அளிக்கிறது.
Theruvil kidantha ennai kadhal enum un theeril etri ennai ulava seithu vittu indru pirivu endra oru vaarthaiyil muluvathumaaga en vaalkaiyaiye kelvikuri aakkivittaye.
தெருவில் கிடந்த என்னை காதல் எனும் உன் தேரில் ஏற்றி என்னை உலவ செய்து விட்டு இன்று பிரிவு என்ற ஒரு வார்த்தையில் முழுவதுமாக என் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டாயே.
Un koormaiyaana vaarthaigalaal ennai vathaikathe penne unnal eppotho en idhayam norungi ponathu ippothu irupatho intha vetru udalil ulla uyir mattume…
உன் கூர்மையான வார்த்தைகளால் என்னை வதைக்காதே பெண்ணே உன்னால் எப்போதோ என் இதயம் நொறுங்கி போனது இப்போது இருப்பதோ இந்த வெற்று உடலில் உள்ள உயிர் மட்டுமே…
Un sammatham endra vaarthaikulle adanki nirkirathu en ethirkaala vaalkaiyin makilchi.
உன் சம்மதம் என்ற வார்த்தைக்குள்ளே அடங்கி நிற்கிறது என் எதிர்கால வாழ்க்கையின் மகிழ்ச்சி.
Einthu nimidam kooda namakaaga kathiruka thayangubavargal thaan oru kaalathil unakaaga kaalam muluvathum kaatirupen endru solliyirupaargal.
ஐந்து நிமிடம் கூட நமக்காக காத்திருக்க தயங்குபவர்கள் தான் ஒரு காலத்தில் உனக்காக காலம் முழுவதும் காத்திருப்பேன் என்று சொல்லியிருப்பார்கள்.
Nee oruvarai anbu kondu nesipathu alagaanathu… aaanal unnai oruvar urimaiyodu nesipathu migavum aalamaanathu…
நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது… ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது மிகவும் ஆழமானது…
Unnal tholaintha en idhayam innum nee vittu sendra idathil irunthu kondu unnai ethir nokkiye kaathu nirkirathu nee varapovathu illai enbathai arinthum kooda.
உன்னால் தொலைந்த என் இதயம் இன்னும் நீ விட்டு சென்ற இடத்தில் இருந்து கொண்டு உன்னை எதிர் நோக்கியே காத்து நிற்கிறது நீ வரப்போவது இல்லை என்பதை அறிந்தும் கூட.
Anaivaridavum anbu kollalam, paasam vaikalam, nesamudan uraiyaadalam, aaanal itharku ellam apparpatta oru nabar endraal athu nam manathai thottavargale… annabaruku nam idhayam kodukum idame thanithaan…
அனைவரிடவும் அன்பு கொள்ளலாம், பாசம் வைக்கலாம், நேசமுடன் உரையாடலாம், ஆனால் இதற்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு நபர் என்றால் அது நம் மனதை தொட்டவர்கள்… அந்நபருக்கு நம் இதயம் கொடுக்கும் இடமே தனிதான்…
0 Comments